தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
1 min read
Devotees who broke coconuts on their heads and paid fine
4.8.2024
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கிற்கு மறுநாள் (ஆடி 19) பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டு, இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி மகாலட்சுமிக்கு கோவில் பாரம்பரிய பூசாரி அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று, கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றினார்.
அதன்பின்னர், கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் சில பக்தர்களின் தலையில் காயம் ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.