மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார்
1 min readComplaint to Human Rights Commission regarding Mancholai case
8.8.2024
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலை கிராமங்களில் உள்ள தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்த காலம் விரைவில் முடிவடையுள்ள நிலையில், அங்கு பணியாற்றும்தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முத்துராமன் என்பவர் கடந்த ஜூலை 8-ந்தேதி, மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் நீண்ட காலமாக வனப்பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் தொடர்பான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கி இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.