டெல்லி: லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கைது
1 min read
Delhi: Assistant Director of Enforcement arrested in bribery case
8/8/2024
மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
கேட்ட பணம் தரவில்லையென்றால் கைதுசெய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இறுதியில், ரூ.20 லட்சம் தருமாறு நகைக்கடை வியாபாரியிடம் பேரம் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.