June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி புதிய எஸ்பியாக வி.ஆர்.சீனிவாசன் நியமனம்

1 min read

VR Srinivasan appointed as Tenkasi new SP

9/8/2024
தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருவண்ணா மலை உட்பட மாநிலம் முழுவதும் காவல் துறை யில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த ஐபி எஸ் அதிகாரிகள் 56 பேர் திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாள ராகப் பணியாற்றி வந்த டி.பி.சுரேஷ்குமார் பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னையில் அண்ணாநகர் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த வி.ஆர். சீனிவாசன் தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்காசி டிஎஸ்பி மற்றும் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணைய ராக பணியாற்றியுள்ளார்.
அதே நேரத்தில் நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஆதர்ஷ் பச்சேரா பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *