பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
1 min read
CBI officials raid Ponmanikavel’s house
10.8.2024
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாக, சிபிஐ 2023ல் பதிவு செய்த வழக்கில் தற்போது பொன்மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்த சோதனை சுமார் 7 மணி நேரம் நீடித்தது.
சோதனைக்கு பிறகு பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “ஓராயிரம் வழக்குகள் என்மேல் உள்ளன. நான் சாகும்வரை என்னை விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். நானே என் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினேன்.” என்றார்.