June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் கடையடைப்பு -சுற்றுலா பயணிகள் அவதி

1 min read

Shops closed in Courtalam – Tourists suffer

10.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்
குற்றாலநாதர் சுவாமி கோயில் கடைகளின் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் இன்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் டீ குடிப்பதற்கு கூட கடைகள் இல்லாமல் அவதிப்பட்டனர்.

குற்றாலம் திரு குற்றாலநாதர் சுவாமி கோவில் கடை வாடகைதாரர்கள் முழு பணத்தையும் கட்டினாலும் கூட சுவாதீன உரிமை ரத்து செய்யப்படும். என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், வாரிசுதாரர்களையும் வாடகை தாரர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், 2020ல் வாடகைதாரர்களுக்கு பெயர்
மாற்றம் செய்து கொடுங்கள் என்ற அரசின் அறிவிப்பின்படி பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9
அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இன்று (10ம் தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம்
நடைபெறும் என்று குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.
அதன்படி குற்றாலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது இதனால் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் வெறும் அவதி அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *