August 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடைத்தில் கதம்ப வண்டு கொட்டி வாலிபர் சாவு

1 min read

கடைத்தில் கதம்ப வண்டு கொட்டி வாலிபர் சாவு/ man died / bitten by a cockroach in kadayam

1.9.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரியப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 40). தோசை மாவு விற்பனை செய்து வந்தார்.
இவர் இன்று காலை கடையம் ராமநதி அணை அருகே சூட்சமுடையார் கோவில் அருகே கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது கடம்ப வண்டு ஒன்று கொட்டியது. இதனால் பயந்து போன அவர் லுங்கினால் மூடிக்கொண்டு படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் இன்னும் சில வண்டுகள் அவரை சுற்றின. ராமசாமி எழுந்தபோது மேலும் சில வண்டுகள் கொட்டின. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்தார்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகி்ச்சை பலனின்றி பரிதமாக இறந்தார்.
இந்த ராமசாமிக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *