தமிழ்நாட்டு கல்விமுறை, சிலருக்கு கண்னை உறுத்தது-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
1 min read
Tamil Nadu education system, eye-opening for some – Minister Udayanidhi Stalin’s speech
9.9.2024
9.9.2024
மதுரையில் 1013 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.108 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கிக் கடனை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி என்பது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் அளித்த நற்சான்றாகும். அதனால்தான் அரசின் சேவைகளை தேடி போய் பெற்றுக்கொண்ட காலம் மாறி, மக்களைத் தேடி வந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்ய பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.30,075 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.35,000 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு உங்களுக்கு கொடுத்திருப்பது வெறும் கடன் தொகை மட்டும் கிடையாது. அதை உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தொகையாகதான் முதலமைச்சர் அவர்கள் பார்க்கிறார்கள். வங்கிக்கடன் இணைப்பை பெற்றுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில் முனைவோராக உருவாகி, நாலு பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரி தமிழ்நாட்டில் தான் அதிகாரித்து, இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிறந்த உயர்கல்வி நிறுனங்களைக் கொண்ட நம்பர் 1 மாநிலமும் தமிழ்நாடுதான்.
அரசுப்பள்ளியில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் IIT, NIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். ISRO, Sillcon Vally போன்றவற்றில் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்தியாவிலேயே சிறந்த பாடத்தைக் கொண்ட நம் தமிழ்நாடுக் கல்விமுறைதான். பகுத்தறிவோட கேள்வி கேட்க கற்றுக்கொடுக்கும் தமிழ்நாட்டு கல்விமுறை, சிலருக்கு கண்னை உறுத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநாட்டை போல அமைச்சர் மூர்த்தி நடத்தினார். மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் வாக்குறுதி கொடுத்தனர். மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அமைச்சர் மூர்த்தி முதல்-அமைச்சரிடம் கேட்டு செய்து வருகிறார்.
சுய உதவிக் குழு மற்றும் பட்டா வழங்குவதற்கு அரசு மக்களை தேடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டுமனை பட்டாக்கள், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு தொடர்ந்து திமுக அரசு கொடுத்து வருகிறது. பட்டா வாங்கிய அனைவரும் நிம்மதியாக தூங்குவதை திமுக அரசு நிலைநாட்டி வருகிறது. மகளிர் இலவச பேருந்து மூலமாக பல பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நாட்டிலேயே உயிர்களை காப்பதில் தமிழகம்தான் முக்கிய இடத்தில் உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. திமுக அரசின் திட்டத்தை மக்கள் தான் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.