June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

1 min read

Periyar’s birthday: Tribute to Chief Minister M. K. Stalin

17/9/2024
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மேயர், மற்றும் அரசு அதிகாரிகள் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *