June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மின்னொளியில் ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா- தீபாவளி கொண்டாட்டம்

1 min read

Singapore lit up with lights – Little India – Diwali celebration

19/9/2024
தீபாவளி கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் இப்போதே களை கட்டியுள்ளன. லிட்டில் இந்தியா, மின்னொளியில் ஜொலிக்கிறது.
வழக்கம் போல கேம்பல் சாலையில் தீபாவளி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பலகாரங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடை அணிகலன்கள் என ஒரே இடத்தில் தீபாவளிப் பொருட்களைப் பெறவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியக் கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள லிஷா புதையல் வேட்டை விளையாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேக்கா ராஜா யானை உருவச்சிலை சிறார்களுக்கு விருந்து படைத்துக் குதூகலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
பூ கட்டுதல், ரங்கோலி வரைதல் பயிலரங்கு நடைபெறுவதோடு வெளிநாட்டு ஊழியர்களுக்கான போட்டிகளையும், இந்திய மரபுடைமை நிலையம் – சிண்டா ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன. பாரதா ஆர்ட்ஸ் நடனமணிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சியுடன் ஒளியூட்டு விழா துவங்கியது.
இந்திய சமூகத்தினர் கொண்டாடும் விழாவாயினும் இருளை அகற்றி ஒளியை வரவழைக்கும் தீபாவளி பண்டிகை அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் என அமைச்சர் புகழ்ந்துரைத்தார். கொண்டாட்டங்களுக்கு ஆதரவு நல்கிய 23 சமூகத் தலைவர்களுக்கு மேயர் டெனிஸ் புவா நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு நாட்டில் தீப ஒளித்திருநாள் இவ்வளவு விமரிசையாக சிங்கப்பூரில்தான் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *