மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டப்பயனாளிகள் மானியம்
1 min readSubsidy for Rainfed Area Development Programmers
17.9.2024
தென்காசி மாவட்டத்தில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பிப்பது தொடர்பாக தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறை மூலம்
2024- 25 ஆம் நிதி ஆண்டு மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆலங்குளம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், தென்காசி மற்றும வாசுதேவ நல்லூர் வட்டாரங்களுக்கு ரூபாய் 30 லட்சம் நிதி குறியீடாக பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் வட்டார விவசாயிகள் மானாவாரி நிலம் வைத்திருப்பவராகவும் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தை ஈடுபாட்டுடன் செயல்படுத்த கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு மாடு அல்லது 10 ஆடுகள். காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள், தேனீ தொகுப்பு. மண்புழு உரப்பை ஆகியன ஒரு பயனாளிக்கு ரூபாய் 30,000 மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்ட பயனாளிகள் சிறு / குறு விவசாயி பிரிவை சார்ந்த ஆதிதிராவிடராக இருக்கும் பட்சத்தில் மொத்த செலவுத் தொகையில் 20 சதவீதம் கூடுதல் மானியமாகவும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், குருவிகுளம், மேலநீலித நல்லூர் வட்டார விவசாயிகள் தங்களது நிலப்பட்டா, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறு / குறு விவசாயி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை (ஜி 2) அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் மா. இளங்கோ தெரிவித்துள்ளார்.