தென்காசி-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 296 மனுக்கள் மீது நடவடிக்கை
1 min readAction on 296 petitions received in Tenkasi-People’s Grievance Day meeting
17/9/2024
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 296 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .அமிர்தலிங்கம், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா மற்றும்
அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
One attachment
• Scanned by Gmail