June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பகுதியில் நில அதிர்வு;கல்குவாரிகளை கட்டுப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 min read

Earthquake in the end zone; Attention Demonstration to Control Calquaries.

28/9/2024
தென்காசி மாவட்டம் கடையும் அருகே பொட்டல்புதூரில்,
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், நில அதிர்வுக்கு காரணமான கல்குவாரிகளை கட்டுப்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவி அருணன், தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
சேவாலயா சங்கிலி பூதத்தான் அனைவரையும் ,
வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மாரிக்குமார்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பழகன், தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவிந்தப்பேரி
ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமகிருஷ்ணன்,
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், திருமலையப்பபுரம் மாரியப்பன், இரவணசமுத்திரம் முகம்மது உசேன், பொட்டல்புதூர் கணேசன், மந்தியூர் கல்யாண சுந்தரம், மற்றும் மேல ஆம்பூர் லட்சுமணன், பகுஜன் சமாஜ் கட்சி கஜேந்திரன் அதிமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், கவுன்சிலர் மணிகண்டன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது தொகுதி செயலாளர் முகம்மது யஹ்யா,
முதலியார்பட்டி பள்ளிவாசல் தலைவர் செய்யது அஹமது, செயலாளர் நவாஸ்கான், வீரா சமுத்திரம் பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன், மாற்றுத்திறனாளி கள் நலச்சங்க பொறுப்பாளர் மதார் கனி, வழக்கறிஞர் இசேந்திரன்,
கடையம் நலச்சங்க பொருளாளர் கோபால், திருவள்ளுவர் கழக தலைவர் சேதுராமலிங்கம்,
சைவ வேளாளர் பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் விதிகளை மீறும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் இந்தியன் ஹியூமன் விஜிலென்ஸ் மாவட்ட துணை செயலாளர் முகமது யாகூப் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *