June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

1 min read

21 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

9.10.2024
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் 21 மீனவர்கள் சென்றனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், அங்கு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *