June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்கள் குளிக்கத் தடை

1 min read

Flooding at Old Courtal Falls – Prohibition of public bathing

9.10.2024
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமாக ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவது உண்டு. இங்கு குற்றால சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தின் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் தென்காசி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வழக்கம் போல் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *