June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 17 பேருக்கு அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் விடுதலை

1 min read

17 fishermen from Tamil Nadu were acquitted by the Mannar court

10/10/2024
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேருக்கு இன்று அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த செப். 28 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளிலிருந்த 17 மீனவர்களும் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் காவல் இன்று (அக்.10) நிறைவடைந்ததை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், 17 மீனவர்களுக்கும் இலங்கை தலா ரூ. 50,000 (இந்திய மதிப்பு ரூ. 14 ஆயிரம்) அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *