June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டம்

1 min read

Police Sister Program in Girls Schools and Colleges in Tenkasi District

12.10.2024

தென்காசி மாவட்டத்திலுள்ள பெண்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஶ்ரீனிவாசன் கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள பெண்கள் பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள 19 பெண்கள் பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரிகளுக்கு ஒவ்வொரு  பெண் காவலர்கள் என்று நியமிக்கப் பட்டுள்ளனர். 

இதன்படி நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களை  மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்கள்  வாரம் ஒரு முறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக தங்களின் தொலைபேசி எண்களை மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும், மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதுடன், உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

 மேலும் போலீஸ் அக்காவிடம் மாணவிகள் எந்த தயக்கமுமின்றி தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறைக்கும் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தினார்.. 

One attachment • Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *