கரிவலம்வந்தநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் மசாலா பொடி தயாரிப்பு
1 min read
Preparation of masala powder by Women Self Help Group at Karivalamvanthanallur
14.10.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம், கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சங்கரேஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சாம்பார் பொடி உற்பத்தி செய்து வழங்கும் யூனிட் 1-ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சங்கரேஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சாம்பார் பொடி உற்பத்தி செய்து வழங்கும் யூனிட் 1-ஐ சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 334 அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் 354 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 38,567 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் 560060 2000162 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்புடைய ஊராட்சி மகளிர் குழு கூட்டமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்டு மகளிர் கூட்டமைப்பு மூலம் சமையலர்க்கு ஊதியம், எரிவாயு செலவினம், காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் போன்ற செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக சங்கரன்கோவில் வட்டாரம். கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சங்கரேஸ்வரி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் முன்மாதிரி திட்டமாக சங்கரன்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 83 பள்ளிகளில் பயிலும் 3584 மாணவமாணவிகளுக்கு மாதம் தோறும் தேவைப்படும் சாம்பார் பொடி உற்பத்தி செய்து வழங்கும் ஒரு புதிய முயற்சியாக காலை உணவுத்திட்டம் செயல்படும் பள்ளிகளுக்கு சாம்பார் பொடி வழங்கும்பணி இன்றைய தினம் துவங்கப்பட்டது. மேலும் இந்த அலகின் மூலம் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய வட்டாரங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
மகளிர் குழுக்கள் மூலம் தென்காசி மாவட்டத்தில் ள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது போன்று காலை உணவிற்கான சாம்பார் பொடி தயாரித்து வழங்குவதற்கான மகளிர் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அக்குழுக்களைக் கொண்டு இத்திட்டமானது தென்காசி மாவட்டம் முழுவதும் காலை உணவுத் திட்டத்திற்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும்
செயல்படுத்தப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் லாலா சங்கரபாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா ப்ரியதர்ஷினி. மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ்
.மாரிஸ்வரன், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப் பாளர்கள், மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.