August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி

1 min read

Buyers Sellers Meet Program in Tenkasi

15.10.2024
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்கள் இணைந்து வாங்குவோர் விற்பவர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருள்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனரின் வழிகாட்டுதலின்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்கள் இணைந்து வாங்குவோர் விற்பவர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தென்காசி மண்டல உதவி திட்ட அலுவலர் டேவிட் ஜெயசிங் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் செயலாளர் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருள்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் செ முருகன் செய்திருந்தார் இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தாங்கள் உற்பத்தி செய்த உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொண்டனர் இறுதியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுபா அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *