கவிதைப் போட்டியில் தபசுகுமாருக்கு பரிசு
1 min read
Tabasukumar was awarded in poetry competition
22.10.2024
செய்திச் சாரலில் கண்ணாயிரம் என்ற நகைச்சுவை தொடரை எழுதி வருபவர் தபசுகுமார். இவர் மாலைமலரில் செய்தி ஆசிரியராக வேலைபார்த்து பணி நிறைவு பெற்றவர். தூத்துக்குடி அருகே முள்ளன்விளையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து பல கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சமீபத்தில் பழனி நடந்த முருகன் மாநாட்டில் திருக்குறளில் திருமுருகன் என்ற தலைப்பில் கட்டுரை சமர்பித்தார்.
இந்த நிலையில்புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.இந்தப் போட்டி மாணவர்களுக்கு தனியாகவும் பொதுப்பிரிவினருக்கு தனியாகவும் நடந்தது. இதில் வே.தபசுக்குமாருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
புதுவை அரசு ஊழியர் சம்மேளன கட்டிடத்தில் நடந்த விழாவில் புதுச்சேரி படைப்பாளர் இயக்க நிறுவனர் ஆறு.செல்வன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.