தென்காசியில் ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது.
1 min read
Young man from another state arrested for smuggling ganja by train in Tenkasi.
23.7.2026
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை தென்காசி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு தென்காசி வழியாக விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து புறப் பட்டது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக தென்காசி ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல்
கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று அதி காலை தென்காசிக்கு ரெயில் வந்தது அப்போது தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக் டர்கள் மாரிமுத்து. மகா கிருஷ்ணன் மற்றும் போலீ சார் தளவாய் பொன் தனசேகர் ஆகியோர் ரெயிலில் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரெயிலில் பயணித்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரின் பெயர் ரசீப்ஷா என்பதும் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார். அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் அவர் வைத்திருந்த பையில் சுமார் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து தென்காசிக்கு கொண்டு வந்து இங்குள்ள இளைஞர்களிடம் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது
உடனே அவரை பிடித்து தென்காசி மதுவிலக்கு போலீ சாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசீப்ஷாவை கைதுசெய்தனர் மேலும் அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங் களையும் பறிமுதல் செய்தனர்.