பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் பேட்டி
1 min read
Legal action should be taken against singer Isaivani: Arjun Sampath interview
28.11.2024
திருவண்ணாமலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் சபரிமலை அய்யப்ப சுவாமியை பற்றி, பாடகி இசைவாணி அவதூறாக பாடியது பக்தர்களின் மனது புண்படும் வகையில் உள்ளது. அவரது பாடலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவெகதலைவர் விஜய் நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறி வருகிறார். ஆனால் மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர். ஏழை எளிய மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டருக்கு படிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.