June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சின எல்லையில் வளா்ச்சித் திட்டங்கள்- ஷி ஜின்பிங் அறிவுறுத்தல்

1 min read

Development projects on the Chinese border – Xi Jinping’s instructions

11.12.2024
சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரிவு அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வில் பங்கேற்று ஷி ஜின்பிங் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு இதை எல்லைப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
சீனாவின் நவீனமயமான திட்டங்களை எல்லையிலும் செயல்படுத்தி தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமானது.
சீன மொழியை எழுத்து மற்றும் பேச்சு ஆகிய இரு வடிவங்களிலும் தொடா்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
இந்த முன்னெடுப்பில் அரசு சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பாடப்புத்தகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லை பகுதிகளில் நிலவும் பல்வேறு நிர்வாக சிக்கல்களுக்கு ஆய்வு மேற்கொண்டு தீா்வு காணும் வகையில் சுதந்திரமான சீன அறிவுசார் அமைப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா, பூடான், திபெத் ஆகிய நாடுகளுடன் பகிரப்படும் எல்லைப் பகுதிகளில் வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம், தபால், கைப்பேசி சேவைகள் மற்றும் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் சீனா நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *