June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலை கிரிவல பாதையில் 4 பேர் தற்கொலை

1 min read

4 people die on the Tiruvannamalai Giriwala route

28.12.2024 சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளோடு வந்த தங்குவதற்கு திருவண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள தனியார் தங்கும் விடுதியான டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே என்ற தங்கும் விடுதியில் தங்குவதற்கு 2 தினங்களுக்கு முன்பு ரூம் காலியாக உள்ளதா என்று விசாரித்ததாகவும். வெள்ளிகிழமை அன்று காலையில் ரூம்மை உறுதி செய்தவர்கள் மதியம் ஒரு மணி அளவில் ஸ்ரீ மஹா கால வியாசர் (45) இவருடைய மனைவி ருக்மணி பிரியா (40) மகள் ஜலந்தரி (15) ஆகாஷ் குமார் (17) வந்து தங்கியதாக சொல்லப்படுகிறது. இன்று (28ந்தேதி) காலை நீண்ட நேரம் ஆகியும் யாரும் ரூம்மை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் ரூமின் அருகில் சென்று பார்த்தபோது ஜன்னல் கதவு திரை விலகி இருந்ததாகவும். சந்தேகத்திற்கு இடமான வகையில் படுத்திருந்ததை பார்த்த அந்த நபர் அருகில் இருந்தவர்களை அழைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் விரைந்து வந்து கிராமிய காவல் நிலையம் போலீசார் 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு தங்கி இருந்த அறையில் இருந்து வீடியோ ஒன்று கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அந்த வீடியோவில் தன்னுடைய பணி முடிந்து விட்டதாகவும் இறைவனடி செல்கிறேன் என்று கூறி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் விஷம் குடித்து உயிர் இருந்து இருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையின் முடிவில் தான் முழுமையான விவரம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *