June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி காசி கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த கடையம் வாலிபர் கைது

1 min read

Man arrested for setting fire to the entrance gate of Kashi Temple in Tenkasi

4.1.2025
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுர வாசல் நுழைவு வாயில் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரால் திடீர் பரபரப்பு – பற்றி எரிந்த தீயை கோவில் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள் அனைத்தனர்.

தென்காசி நகரில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது . இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு பல்வேறு திருப்பணி வேலைகள் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஒரு நபர் தனது கையில் வைத்திருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை திறந்து கோவில் நுழைவு வாயில் பகுதியில் ஊற்றி தீ வைத்தார்.
தீ பற்றி எரிந்ததும் அந்த நபர் கோவிலுக்குள் தப்பி ஓடி வட்டார்

இதைப் பார்த்த கோவில் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டிஎஸ்பி தமிழ் இனியன் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் கூடியிருந்த மக்களிடம் விசாரணை மேற்கொண்டார் அப்போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கோவில் நுழைவாயில் முன்ப பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை தென்காசி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவரது பெயர் ஆனந்த பாலன் (வயது 31)
என்பதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் கோவிலின் நுழைவு வாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ஆனந்த பாலன் நான்தான் சிவன் நான்தான் கோவிலில் உள்ளேன் என்ற ரீிதியில் பேசியதாகவும் எனவே அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காலையில் சம்பவம் நடைபெற்ற போது கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பல பக்தர்கள் கோவில் கும்பாபிஷேக வேலை நடைபெற்றவரும் சூழ்நிலையில் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *