June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 3 பேருக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு

1 min read

3 people in India infected with HMBV virus

6/1/2025
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குஜராத்தில் எச்.எம்.பி.வி. பரவல் பதிவாகியுள்ளது. சந்த்கேடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி. பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது, இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. கடந்த சனிக்கிழமை கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
எனினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் இந்த ஆண்டு முழுவதும் கண்காணிப்பு பணியானது தொடர்ந்து நடைபெறும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இந்த தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், சீனாவில் உள்ள நடப்பு சூழல் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *