பொங்கல் பரிசு தொகை ரூ.ஆயிரம் வழங்க காங். கோரிக்கை
1 min read
Congress demands Rs. 1,000 as Pongal gift
9.1.2025
தமிழர் திருநாள் பொங்கல் விழாவிற்கு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம் எல்ஏ கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறி யிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியு டன் கொண்டாடும் வகை யில் ஜனவரி மாதம் ஏழை எளிய மக்கள் பயன்பெ றும் வகையில் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் அறிவித்து பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வழிவகை செய்தீர்கள். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளி யாகி உள்ளது.
மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் மூலம் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
தினமும் காலை உணவு திட்டம், முதியோர் உத வித்தொகை என பல்வேறு திட் டங்களை கடும் நிதி நெருக்க டிக்கு இடையில் ஒன்றிய அரசு பேரிடர் நிதியை கூட கொடுக்காத போதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறீர்கள்.
அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம். மேலும் ஒவ் வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் வழங்கியது போல் தமிழக ஏழை எளிய மக்கள் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் ஆயிரம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
எனவே ஏழை எளிய மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல் வர், பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1000 வழங்கினால் மகளிர் உரிமைத் தொகை பெறாதகுடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடு வார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.