கலெக்டர் தலைமையில் கரிவலம்வந்தநல்லூரில் மனுநீதி நாள் முகாம்
1 min read
Human Rights Day Camp in Karivalamvantanallur under the leadership of the Collector
9.1.2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் கரிவலம்வந்தநல்லூர் கிராமம் கவிபரணி மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் கரிவலம் வந்தநல்லூர் கிராமம் கவிபரணி மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,தெரிவித்தார்.
இந்த முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 38 பயனாளிகளுக்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பிலான வரன்முறை பட்டாக்களையும், 27 பயனாளிகளுக்கு ரூ.135 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான உதவித்தொகையினையும் (மாதம் গ):1500/- வாழ்நாள் முழுவதும்) வேளாண்மைத்துறை மூலம் 01 பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (2024-2025) மின்கல விசைத்தெளிப்பான் விலை ரூ4648 / இல் ரூ.2075 மானியமும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் 0 பயனாளிகளுக்கு 125 கிலோ அங்கக உரம் ரூ.3000/ இல் ரூ.1143/. மானியமும். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 3 லிட்டர் அங்கக திரவ உரம் ரூ.1920/- இல் மானியம் ரூ. 1920-ம் தோட்டக்கலைத்துறை மூலம் 01 பயனாளிக்கு ரூ.8000/- மதிப்பிலான மிளகாய் குழித்தட்டு நாற்றுகளையும், பயனாளிக்கு ரூ.8000/- மதிப்பிலான தக்காளி குழித்தட்டு நாற்றுகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு 03:47 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர வழங்கினார்.
இந்த மனுநீதி நாள் முகாமில், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை. சமூகநலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன் கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக்அயூப் சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.