ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கூடாது: தமிழக போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை
1 min readThere should be no discrimination between ruling party and opposition party: High Court advises Tamil Nadu Police
10.1.2025
” ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்,” என தமிழக போலீசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை எனக்கூறி பா.ம.க. தாக்கல் செய்த மனு இன்று (ஜன.,10) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ” தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்,”ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு கட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ஒரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி, மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் இருக்க்கூடாது. போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போலீசாரை தான் குறை சொல்வார்கள் ” எனக்கூறிய நீதிமன்றம் பா.ம.க., மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.,23க்கு தள்ளி வைத்தது.