கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
1 min read
Work on establishing a flight training center in Kovilpatti is in full swing.
2.2.2025
நம் நாட்டினர் விமான பயிற்சி பெற, வெளிநாடு செல்வதை தடுத்து, தமிழகத்திற்கு வரவழைக்க, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்கும் பணியை, ‘டிட்கோ’ வேகப்படுத்தி உள்ளது.
மத்திய அரசு, நாடு முழுதும் முக்கிய நகரங்களில், புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில், விமான சேவை பன்மடங்கு அதிகரிக்க உள்ளதால், விமானத்தை இயக்கும், விமானிகளின் தேவையும் அதிகரிக்கும்.
இந்தியாவில் சர்வதேச தரத்தில், விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்கள் மிகவும் குறைவாக உள்ளன. இதனால், இந்தியாவில் இருந்து பலரும் விமான பயிற்சி பெற, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். இதற்காக, அதிகம் செலவிடுகின்றனர்.
இதை தவிர்க்கவும், விமான பயிற்சி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விமான பயிற்சி நிலையம் அமைக்க, ‘டிட்கோ’ எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புதுார், தோணுகல் கிராமங்களில், அரசின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தனியார் நிறுவனம் விமான ஓடுதளம் அமைத்து உள்ளது.