புளியரை சோதனைச் சாவடியில்கனிமவள லாரிக்கு அபராதம் -அதிகாரிக்கு கொலை மிரட்டல்
1 min read
Mineral lorry fined at Puliyarai checkpoint – Motor Vehicle Inspector receives death threat
7.2.2025
தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் உரிய அனுமதி இல்லாமல் கனிம வளங்களை ஏற்றிச்சென்ற வாகனத்திற்கு அபராதம் விதித்த
அதிகாரிக்கு லாரி டிரைவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களாக உள்ளது.
இந்நிலையில் நேற்று புளியரை
சோதனைச் சாவடியில் மோட்டார் ஆய்வாளர் குமார் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தார் அப்போது தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கனிமவள லாரியை வழிறித்து சோதனை செய்த போது அதில் மூறையான அனுமதி இல்லாததை கண்டுபிடித்தார்.
உடனடியாக அந்த லாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் மற்றும் சிலர் தங்களின் வாகனத்தை விடுவிக்குமாறு ஆய்வாளருட ன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளருக்கு அந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபற்றி மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் உடனடியாக புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த புளியரை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் போலீசார் வருவதை அறிந்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் வாகன ஆய்வாளருக்கு கொலை மிரட்டு விடுத்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் ம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகள் தமிழக அரசின் விதிமுறைகளை மதிப்பது இல்லை. மேலும் பெரும்பாலான லாரிகள் உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பதில்லை இதனை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகளை அந்த லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிரட்டி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இது போன்ற கும்பல் மீது தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.