June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் அரசு நிர்ணய விலையில் நெல்விற்பனை

1 min read

Paddy sale at government fixed price in Tenkasi district

26.2.2025
தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை அரசு நிர்ணயித்த விலையில் இடைத்தரகர்கள் இன்றி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக வேளாண்மைத்துறை பரிந்துறையின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2023-2024-ம் பருவத்தில் மட்டும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரக நெல் கிலோ ஒன்றிற்கு ரூ.23.10/- க்கும், பொதுரக நெல் கிலோ ஒன்றிற்க்கு ரூ.22.65/-க்கும், விவாசயிகளுக்கு வழங்கி 23027 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய தொகையினை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

தற்போது 2024 – 2025-ம் கொள்முதல் பருவத்தில் சன்னரக நெல் கிலோ ரூ.24.50/- க்கும், பொதுரக நெல் கிலோ ரூ.24.05/-க்கும், வழங்கி சுமார் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து. சுமார் 35000 மெ.டன் நெல் வரையில் கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஏனவே, தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை அரசு நிர்ணயித்த விலையில் இடைத்தரகர்கள் இன்றி அருகில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *