June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நாக்பூர் வன்முறை: கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி வீட்டை இடித்துத் தள்ளிய அதிகாரிகள்

1 min read

Nagpur violence: Municipal Corporation officials demolish house of arrested main accused

24.3.2025
அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. மத நூல் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன, இதில் நாக்பூரில் 40 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக பாஹிம் கான் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி பட்னாவிஸ், வன்முறையால் நகரத்தின் 80 சதவீத பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து நேற்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.

இந்த நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது.

சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *