தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்; முதல்வருடன் எச்டி ஹூண்டாய் அதிகாரிகள் சந்திப்பு
1 min read
Shipbuilding yard in Thoothukudi; HD Hyundai officials meet the Chief Minister.
17.6.2026
தூத்துக்குடியில் ரூ.38000 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம் தொடர்பாக முதல்வர் விஜயுடன் ஹூண்டாய் குழுமத்தினர் சந்தித்து பேசி உள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர் சந்திப்பில் கலந்து கொண்டனர். ஹூண்டாய் நிறுவனத்தின உலகளாவிய வணிக பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் கலந்து கொண்டு இந்த திட்டத்தின் செயல்பாடுகள், முதலீட்டு வழிமுறைகள் குறித்து முதல்வர் விஜயுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
முறையான திட்டமிடல், வழிகாட்டுதல் கீழ் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும், தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.