June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

முதலமைச்சர் விஜயுடன் வைகோ சந்திப்பு

1 min read

Vaiko meets Chief Minister Vijay.

17/6/2026
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மீண்டும் துவங்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியதாக வைகோ நிருபர்களிடம் கூறினார்.

நாளை சட்டசபை கூடும் சூழ்நிலையில் விஜயுடன் வைகோ சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ம.தி.மு.க.வும், த.வெ.க.வை நோக்கி நகர்வதாக தெரிகிறது.

முன்னதாக, நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் விஜயை வைகோ சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் ம.தி.மு.க.வில் தற்போது நடைபெறும் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *