June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்-17 நாகை மீனவர்கள் காயம்

1 min read

Sri Lankan pirates attack – 17 Naga fishermen injured

3.5.2025
நாகப்பட்டினம்: நடுக்கடலில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் நாகையை சேர்ந்த நாகை மீனவர்கள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது: நாகையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன்பிடித்து கொண்டு இருந்த போது, படகில் வந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் கூர்மையான ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தினர். மேலும் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் மீன்வலைகளை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.

காயமடைந்தவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த தாக்குதல், இந்திய கடல் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடவேண்டும். இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால், காலவரையற்ற போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *