பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்
1 min read
Prime Minister Modi is a wonderful person: Trump heaps praise.
7/6/2026
பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அழகானவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
பிரான்ஸில் ஏவியான் நகரில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின்போது, செய்தியாளர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது, பேச்சுவார்த்தையில் அவர் மிகவும் கடினமானவர். அவர் மிகவும் அழகான மனிதர்.
அவர் ஒரு தேவதையைப் போன்றவர். அவர்கள் வருவதைப் போலவே மோடி கடினமானவர். இதனால்தான் அவர் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். ஆனால், அப்படிப்பட்டவர்கள் வெகு சிலரே.
அவர் ஒரு நல்ல மனிதர் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால், நான் சொல்கிறேன் – அவர் மிகவும் கடினமானவர். நாங்கள் (அமெரிக்கா) இந்தியாவுக்கு வருங்காலத்தில் செல்வோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ரஷியா – உக்ரைன் போர் தொடர்பாக இரு நாட்டு அதிபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் டிரம்ப் கூறினார்.
முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தானும் பிரதமர் மோடியுதான் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான ஜோடி என்று கூறினார்.
கடந்த மாதம் இத்தாலி சென்றிருந்த பிரதமர் மோடி தான் இந்தியாவிலிருந்து உங்களுக்கு பரிசொன்று வாங்கிவந்திருக்கிறேன் என்று கூறி, மெலோனிக்கு மெலோடி சாக்லெட் கொடுத்த விடியோ வைரலாகியிருந்த நிலையில், இன்றைய விடியோவும் வைரலானது.