சிங்கப்பூர் தேர்தலில் கடையநல்லூரைச் சேர்ந்தவர் வெற்றி
1 min read
A person from Kadayanallur wins the Singapore election
5.5.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த. டாக்டர் ஹமீத் ரசாக் என்பவர் சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் 2025 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிஏபி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளாராக சிங்கப்பூரின் ஜூரோங் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் இந்திய வம்சாவழி தமிழரான டாக்டர் ஹமீத் ரசாக் வெற்றிபெற்று சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
டாகடர் ஹமீத் ரசாக் சிங்கப்பூரின் புகழ்பெற்ற எலும்பு அறுவைசிகிச்சை மருத்துவராவர்.
இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை சிங்கப்பூர் தமிழராவார்.
இவருடைய தாத்தா,பாட்டி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர்.கடையநல்லூரிலிருந்து மூன்று தலைமுறைக்கு முன்னர் சிங்கபூருக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒசைனா குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் தந்தை ஒசைனா அப்துல் ரசாக் சிங்கப்பூரில் சுங்க இலாகா அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
டாக்டர் ஹமீத் ரசாக் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கடையநல்லூர் பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்
தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.