June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சாலை விபத்துக்கு நாடு முழுவதும் இலவச சிகிச்சை – மத்திய அரசு அறிவிப்பு

1 min read

Free treatment for road accidents across the country – Central Government announcement

6.5.2025
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *