கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் சாவு; 2 பேர் கவலைக்கிடம்
1 min read
2 people die while cleaning a septic tank; 2 others hospitalized
19.5.2025
திருப்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் வந்துள்ளனர்.
வழக்கம் போல், இருவரும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சரவணன், வேணுகோபால் ஆகியோருடன் வந்திருந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.