தென்காசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Tenkasi: Woman involved in selling ganja arrested under the Gangster Act
22/5/2025
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் காவல் நிலைய பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தென்காசி மாவட்டம்
வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த சுடலைராஜ் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 28) என்பவர் கஞ்சா விற்பனைகள் ஈடுபட்டு வந்தார் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போதும் யாமினில் வெளிவந்து மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனை செய்து வந்தார்.
எனவே மகாலெட்சுமி மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது அச்சன்புதூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 05 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.