June 15, 2025

Seithi Saral

Tamil News Channel

விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

1 min read

3 people drown in river near Villupuram

21.5.2025
விழுப்புரம் மாவட்டம், அரசூர் பகுதியில் மலட்டாற்றில் 3 பேர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் மூழ்கி 3 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அரசூரைச் சேர்ந்த அபிநயா,15, சிவசங்கிரி,20, தட்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்,15, ஆகிய 3 பேர் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் அபிநயா, சிவசங்கிரி ஆகிய இருவர் சகோதரிகள் ஆவர். ஆற்றில் குளிக்க சென்றபோது 3 பேர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.