June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்லறைக்குள் செல்ல உமர்அப்துல்லாவுக்கு அனுமதி மறுப்பு-திடீரென சுவர் ஏறி குதித்து போனார்

1 min read
Omar Abdullah denied permission to enter the cemetery - suddenly he climbed the wall and jumped out 
14.7.2025
காஷ்மீர் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் தனது அமைச்சர்களுடன் திடீரெனக் கல்லறை ஒன்றுக்குச் செல்கிறார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்க மறுக்கவே உடனடியாக அவர் கல்லறை சுவர் மீது ஏறிக் குதித்து உள்ளே செல்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

காஷ்மீரில் 1931ம் ஆண்டு அப்போது மன்னராக இருந்த ஹரி சிங்கிற்கு எதிராக அங்குள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்ரீநகர் மத்தியச் சிறைக்கு அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மன்னரின் டோக்ரா ராணுவத்தினர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். அதில் 22 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
22 பேர் கொல்லப்பட்ட இந்த ஜூலை 13ம் தேதி காஷ்மீர் தியாகிகள் தினமாக அங்கு அரசகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள பல்வேறு கட்சியினரும் அந்த 22 பேர் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். இருப்பினும், இந்தாண்டு அங்குள்ள லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா நிர்வாகம் இதற்குத் தடை விதித்தார். ஜூலை 13ம் தேதி எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.

முந்தைய பதிவில் அப்துல்லா இந்தச் சம்பவத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலையுடன் ஒப்பிட்டிருந்தார். இருப்பினும், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான தருண் சுக் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து, "ஜாலியன்வாலா பாக் என்பது ஆயுதங்கள் இல்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனம். ஜூலை 13 சம்பவம் என்பது அமைதியைக் குலைக்க முயன்ற போது நடந்த சம்பவம். உண்மைகளைத் திரித்து எங்கள் சுதந்திர இயக்கத்தை அவமதிக்க வேண்டாம். இது தியாகம் அல்ல. வன்முறையை மூடி மறைக்கும் செயல்" என்று பதிலளித்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *