August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

1 min read
Woman tries to set herself on fire with 2 sons at Tenkasi Collectorate office 15.7.2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண் மாற்றுத்திறனாளி மகனுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முப்புடாதி என்பவரின் மனைவி செண்பகவல்லி. இவர் நேற்று தனது மாற்றுத்திறனாளி மகனுடன் கலெக்டர் அலு வலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலகத்தில் இரண்டு கட்ட பாதுகாப்பை தாண்டி மூன் றாவது கட்ட பாதுகாப்பு பகுதி அதாவது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு சற்று முன்பு வைத்து மஞ்சள் பையில் உள்ளே கேனில் குடிநீர் போன்று வைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண் ணையை தன் மீதும் மாற்றுத்திறனாளி மகன் உள்பட இரண்டு மகன்கள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார்.

அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதனை பார்த்ததும் உடனடியாக அவர்களைப் பிடித்து தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவரை அழைத்துச்சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர்.

அந்த மனுவில் அவரகள் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியில் மாற்றுத் திறனாளி மகன் மற்றும் காசநோய் பிடித்த கணவனுடன் சுமார் 40 வரு டங்களாக புறம்போக்கு நிலம் ஒன்றில் குடிசை வீடு கட்டிவசித்து வருவதாகவும் சிலர் அதனை காலி செய்ய வலியுறுத்தி இடை யூறு செய்து வருவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பையும் மீறி மண் ணெண்ணெய் கொண்டு வந்து உடலில் தன் மீதும் மாற்றுத்திறனாளி மகன் உள்பட இரண்டு மகன்கள் மீதும் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *