People's Grievance Redressal Day meeting in Tenkasi
15.7.2025 தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 480 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
உலக இளைஞர் திறன் நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி. பேச்சுப்போட்டி மற்றும் திட்டக் கண்காட்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சிப் பிரிவுக்கு வழங்கிய ஈப்புகளை தென்காசி, ஆலங்குளம், கடையம், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், மாவட்ட ஊராட்சி செயலரிடமும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒப்படைத்தார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.