June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

1 min read
Money stolen from temple near Alankulam after breaking the lock  
15.7.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு மாயமான்குறிச்சி பகுதியில் கடற்கரை மாடசாமி கோயில் உள்ளது. 65 குடும்பத்தினர்களுக்கு பாத்தி யப்பட்ட இக்கோயிலில் கருப்பசாமி மற்றும் 21 பரிவார தேவதைகளுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வழிபாடு நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுவாமியை தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் கோயிலின் கதவில் உள்ள பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கோயில் நிர்வாகி வேல்மயிலுக்கு தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து வேல்மயில் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உண்டியலில் ரூ.25 ஆயிரம் வரை பணம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வேல்மயில் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு இதே நாளில் மாயமான்குறிச்சி அருகே உள்ள மாறாந்தை கால்வாய் கரையில் உள்ள சுடலை மாட சாமி கோயில் உண்டியலை உடைக்க முயற்சி நடந்தது. இதுபோன்று மானூர் கால் வாய் கரையில் உள்ள தள வாய் மாடசாமி மற்றும் ஊய்க்காட்டான் கோயிலிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

இந்த 2 கோயிலுக்கும் பாத்தியப்பட்டவர்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கருப்பசாமி கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு வெளியே இருக்கும் கோயில்களை குறி வைத்து மர்ம நபர்கள் இக்கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருகின்றனர்

எனவே ஆலங்குளம் போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தத் தொடர் சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *