No coalition government - Edappadi Palaniswami confirms
16.7.2025
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி என கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது. எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம். 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம். எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா கூறிவிட்டார். அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான். பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் கூறினார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதன்பின் உரையாற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12,000 கோடிக்கு மேல் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வந்தோம். கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க திட்டம். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைவு கூட வேளாண் அமைச்சருக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.