June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வர்களுக்காக டெல்லி ஏர்போர்ட்டில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi waited for 45 minutes at Delhi Airport for NEET aspirants.

21.6.2026
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி 45 நிமிடங்கள் காத்திருந்தார்.
பிரதமர் மோடி நேற்று (ஜூன் 21) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர், பிரதமர் மோடி தனி விமானத்தில் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டார். மதியம் 1.15 மணி அளவில் அவர் டெல்லி விமான நிலையம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் தமது இல்லத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். நேற்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்க உள்ளதை அறிந்த பிரதமர் மோடி உடனடியாக ஒரு காரியத்தை செய்தார்.

தம்மால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் எந்த இடையூறோ அல்லது போக்குவரத்தின் போது நெருக்கடிகளோ ஏற்படக் கூடாது என்று எண்ணி விமான நிலையத்தின் வரவேற்பு அறையிலேயே அவர் காத்து இருந்தார்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை பிரதமர் மோடியின் காத்திருப்பு நீடித்தது. தேர்வு தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

நீட் தேர்வர்களுக்காக காத்திருந்த பிரதமரின் இந்த செயல் பெரும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *