மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
1 min read
Chief Minister Stalin admitted to Apollo Hospital
21/7/2025
சென்னையில் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் எப்படி உள்ளது என நடிகர் ரஜினிகாந்த், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
அப்போது, முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், ”முதல்வர் ஸ்டாலின் விரைவில் பூரண குணம் பெற பிரார்த்தனை செய்கிறேன்,” என்று தெரிவித்தார்.