“கச்சத்தீவை மீட்க வேண்டும்” – அமளிக்கு நடுவே பாராளுமன்றத்தில் வைகோ பேச்சு
1 min read
“We need to restore Katchatheevu” – Vaiko’s speech in Parliament amidst the uproar
23.7.20265
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், 3 ஆம் நாளாக இன்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அமளிக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் பேசிய வைகோ, “இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 150 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை மீட்பது தான் மீனவர் பிரச்சனைக்கான ஒரே தீர்வு” என்று தெரிவித்தார்.